முகப்பு கட்டுரைகள் வீடியோ புகைபடங்கள்

உங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!!!

Friday, December 24, 2010


நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் & ஆய்வு அறிவிப்பு


நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் என புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.



அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு கடந்து விட்ட நிலையில் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத். உலக வர்த்தக வளாக தகர்ப்பு குறித்து உண்மைகளை வெளிவர பாடுபடும் அமைப்பின் கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது மோதிய விமானங்களால் அல்ல குண்டுவெடிப்பின் மூலம்தான் என தனது அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடந்த தாக்கு தலில் 3 ஆயிரம் பேர் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வஅறிக்கைகள் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்திருக்கிறார்.

கட்டிடங்களின் மீது விமானங் கள் மோதவில்லை எனவும், அக் கட்டிடங்களில் நடந்த குண்டு வெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.

உலக வர்த்தக மையம் உரு வாக்கப்பிருந்த இடத்திலிருந்து உரு கிய நிலையிலான உலோகச் சித றல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்கும் சக்தி பெற்றவையல்ல.. ஆத லால் கட்டிடத்தின் உள் பகுதியிலிருந்து இருந்த (!) பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய அவ் வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங் கிணைப்பின் சிதறல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவே உலக வர்த்தக வளாக கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


ஈராக்கில் அமெரிக்கா நடத்திய அயோக்கியத்தனம் நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களின் மூலம் அம்பலப்படுத்தியது விக்கிலீக்

ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் பொதுமக்கள் மட்டும் 66 ஆயிரத்து 81 பேரும் 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சியாளர்கள் , 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்ப்படையினர் என்ற தகவல் வெளி வந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரிக்க இராக் போர்முனையில் செய்த மனித குலவிரோத அத்து மீறல்கள் அமெரிக்காவின் நிஜ முகத்தை மீண்டும் மீண்டும் தோலுரித்துக்காட்டி வருகிறது.




அமெரிக்காவின் அட்டூழியங்கள் அனைத்தும் ஒளிப்பட கோர்வைகளும் புகைப்பட ஆதாரங்களும் வெளியாகி காண்பவர்கள் ரத்தத்தை சூடேற்றியுள்ளது.


இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கின்றன. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல் வது, சிறையில் அடைத்து துன்புறுத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைப்படுத்துவது, சிகரெட்டால் கண்ணை சுடுவது, ரத்தக்களறியுடன் கதற விடுவது போன்ற புகைப்படக் காட்சிகள் இதில் உள்ளன.


இந்த ஆவணங்கள் சட்டவிரோ தமாக, தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் மழுப்பியுள்ளது.. இந்தப் போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்கப் போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதி கள் அதிர்ந்து போய் கருத்து வெளி யிட்டனர்.


கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக அமெரிக்கா ஈராக்கில் இருந்த போது கைதிகளை சித்ரவதை செய்தது, சிறைக்கொடுமைகள் ஆகியவற்றினை விக்கிலீக் இணையதள பத்திரிகை ஆதார த்துடன் வெளியிட்டுள்ளதால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கலக்கமடைந்துள்ளது. அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் விக்கிலீக்கின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஈராக்கில் கொடூரங்களில் கொடூர மான தாக்குதல்களை அமெரிக்க அட்டூ ழிய ராணுவம் நடத்தியதாக ஆவணங் கள் தெரிவிக்கின்றன என்று விக்கிலீக் ஸின் நிறுவனர் ஜூலியா அஸன்ஜா தெரிவிக்கிறார்.


ஈராக்கில் போர்க் குற்றம் நடைபெற்றுள் ளது என்பதற்கான தெளிவான ஆதாரம் இது என லண்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.


அமெரிக்க ராணுவத்தின் செக்போஸ்டு களில் சிக்கிய 700க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளான பெண்களையும், குழந்தை களையும் உள்ளடக்கிய அப்பாவி மக்களை இரக்கமின்றி அநியாயமாக அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்ற நெஞ்சை உறையவைக்கும் வீடியோ ஆதாரங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் முக்கியமானவையாகும்.


ஈராக்குடன் தொடர்புடைய அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் ரகசிய ஆவணங்களிலுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என பிரிட்டனின் துணைப் பிரதமர் நிக் க்ளக் தெரிவித்துள்ளார்.


ஆவணங்களில் கூறப்படும் விஷயங்களில் தொடர்புடையவர்களின் பதிலுக்காக மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்த நிக் க்ளக், 2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பில் பங்கெடுப்பதற்கு அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரின் தீர்மானம் சட்டவி ரோதமானது எனத்தெரிவித்துள்ளார்.


ஈராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியா அஸன்ஜா அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


எனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மாறு வேடத்தில் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். பெர்லின், லண்டன் என அடிக்கடி நாடு மாறும் இவர், வெவ்வேறு பெயர்களில் விடுதிகளில் தங்குகிறார். தனது இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் நண்பர்களிடம் கடனு தவிப் பெற்று பணமாக மட்டுமே செல வழிக்கிறார்.


இவர் ஸ்வீடன் நாட்டில் தங்கியிருந்த போது இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டி அமெரிக்க ஆதரவு சக்திகள் புனைந்த வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விக்கி லீக் நிறுவனர் “இது அமெரிக்க வல்லாதிக்க அரசின் திசை திருப்பும் முயற்சி” என்றார்.

ஊழலில் சாதனை நாட்டின் வேதனை
Friday, 17 December 2010 12:21 .

இந்தியத் திரு நாட்டின் பெருமைக்குச் சான்றாக விளங்குவது நம் மக்களின் எளிமையும் நேர்மையுமே ஆகும். அன்றைய தலைவர்கள் பொருளாதார முறைகேட்டில் ஈடுபட அஞ்சியவர்களாய் வாழ்ந்தனர். இருப்பினும் இந்நாட்டில் தான் ஒருவேளை மட்டும் உணவு கிடைக்காத நிலையில் கோடானு கோடி மக்கள் இருக்கின்றனர்.

மக்களின் வாழ்வில் வசந்தம் கொண்டு வரவில்லையே என்ற ஏக்கத்தில் அன்று இருந்த தலைவர்கள் வேதனை அடைந்தனர். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் ஊழல் கறைபடிந்தவர்களாக மாறத்தொடங்கினர். அதனால் நாட்டின் மானம் சந்திசிரித்தது.பல நூறு கோடி ஊழல்கள், பல்லாயிரம் கோடி ஊழல்கள், என தாண்டி லட்சம் கோடி ஊழல்கள் என ஊழல் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. அதில் தமிழகத்தை ஆளும் திமுக அபார (!) சாதனை படைத்துள்ளது.

அதில் மேலும் வேதனையை கூட்டும் விதமாக ஸ்பெக்ட்ரம் ஊழல்கள் சாமான்ய மக்களின் உள்ளக்குமுறலை அதிகப்படுத்தியது.

அன்று தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவி வகித்த பி.ஜே.தாமஸ், தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (கமிஷனர்) பதவி வகித்து வருகிறார். அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே.தாமஸ், ஏற்கனவே கேரள மாநிலத்தில் முன்பு உணவுத்துறை செயலாளராக பதவி வகித்தபோது பாமாயில் இறக்குமதி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் ஊழல் கண்காணிப்பு கமிஷனராக தேர்வு செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கிலும், பி.ஜே.தாமசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பி.ஜே.தாமசும் (தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பதவி வகித்த வகையில்) சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அவருடைய கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தனர்.

ஊழல் கண்காணிப்பு ஆணையரை பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவினர்தான் தேர்வு செய்ய வேண்டும். தேர்வின்போதே தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பெரும்பான்மை ஆதரவு (பிரதமர், உள்துறை மந்திரி) அடிப்படையில் அந்த பதவியில் தாமஸ் நியமிக்கப்பட்டார்.

“அரசு என்னை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது. அந்த பதவியில் நான் தொடர்ந்து இருந்துவருகிறேன்” என்று பி.ஜே.தாமஸ் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் அவர் மீது தெரிவித்த கண்டனம் குறித்து கேட்டபோது “நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விஷயம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையான செயல் அல்ல’’ என்று தாமஸ் நழுவினார்.

பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இதன்பிறகுதான் அரசு என்னை இந்த பதவியில் நியமித்தது.” என ஆணவமாக அவர் பதில் அளித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைப் பொறுப்பில் இருந்து மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் விலகிக்கொள்ள விரும்புவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பி.ஜே.தாமஸ் பதவியில் நீடிப்பதாகக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் மூலம் பி.ஜே.தாமசை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைத்து, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க ஏற்கனவே நடைபெற்று வரும் முயற்சிகளில் தற்போதைய இந்த நியமனமும் முக்கிய இடத்தைப் பெற்று உள்ளது. கோடானுகோடி பணம் சுருட்டப்பட்ட ஊழலில் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது என்பது தெளிவாகி விட்டது. தற்போது ஊழல் குற்றச்சாட்டின் சந்தேக முள், முழுமையாக மத்திய அரசின் மீது பாய்வதால், இந்த ஊழலின் பயனாளிகள் யார் என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டில் உண்மையைக் கண்டறிய விடாமல், மத்திய கண்காணிப்பு ஆணையத்தையே தலையிடக்கூடாது என்று சொன்னவரையே, அந்த ஆணையராக நியமனம் செய்து உள்ள மத்திய அரசு, அந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, பி.ஜே. தாமஸை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தமிழக அரசின் செயலை ஒடுக்கிட வும் மற்றும் அதனை தாலாட்டி சீராட்டி வரும் மத்திய அரசும் தனது பொருளாதார முறைகேடுகளையும் ஊழலையும் ஒழித்துக்கட்ட இனியும் முன்வராவிட்டால் மக்கள் தீர்ப்பின் முன் அவர்கள் அடையாளம் காணாமல் போவார்கள் என்பது உறுதி.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...



உங்களை அன்போடு வரவேற்கிரோம்.......